பெருவில் (Peru) அவசரகாலநிலை பிரகடனம் : தலைநகரில் ரோந்து செல்லும் இராணுவம்!

பெருவில் (Peru) ஜனாதிபதி ஜோஸ் ஜெரி (José Jerí) பிறப்பதித்த அவசரகாலநிலை உத்தரவை தொடர்ந்து தலைநகரில் இராணுவத்தினர் ரோந்து சென்றதாக ஏபிசி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி ஜோஸ் ஜெரியின் (José Jerí) உத்தரவு அரசியலமைப்பு உரிமைகளை இடைநிறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ஒன்றுக்கூடுதல், எதிர்ப்பு தெரிவிக்கும் சுதந்திரம், உள்ளிட்டவற்றை பாதித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணிப்பது, கைதிகளை பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை கட்டுப்படுத்துவது உள்பட பல விடயங்களை பாதித்துள்ளது.
மேலும் சிறை அறைகளுக்கான மின் வெட்டுக்களை துண்டிப்பது உள்ளிட்ட பல விடயங்களும் அடங்கும்.
தென் அமெரிக்க நாடு முழுவதும் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்க இயலாமை காரணமாக அப்போதைய ஜனாதிபதி டினா போலுவார்ட்டை (Dina Boluarte) சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கிய பின்னர் அக்டோபர் 10 அன்று ஜெரி (José Jerí) ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றார்.
மிகப் பெரிய போராட்டத்தை தொடர்ந்தே இந்த பதவியேற்பு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்தே புதிய ஜனாதிபதி மேற்படி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.