பொழுதுபோக்கு

#SHOCKING : ஸ்ரீமத் ராமாயணத்தில் நடித்த ராமர் மரணம்

சோனி SAB (சன் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்ட சீரியல்) இன் ‘ஸ்ரீமத் ராமாயண்’ தொடரில் சிறுவயது ராமராக நடித்த எட்டு வயது நடிகர் வீர் சர்மா மற்றும் அவரது 16 வயது சகோதரர் ஷோரியா சர்மா ஆகியோர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

குழந்தை நட்சத்திரமான வீர் ஷர்மா தனது வீட்டில் நேர்ந்த தீ விபத்தில் மூச்சுத் திணறி உயிரிழந்தார். இந்த தீ விபத்தில் வீர் ஷர்மாவின் சகோதரர் செளர்யா ஷர்மாவும் உயிரிழந்தார்.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் வீர் ஷர்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

தனது சகோதரருடன் வீட்டில் தனியாக உறங்கிக்கொண்டிருந்தபோது மின்பழுது காரணமாக திடீரென தீ விபத்து நேர்ந்துள்ளது.

தனியார் பயிற்சி நிறுவனத்தின் ஆசிரியரான இவரின் தந்தை, சம்பவத்தின்போது பஜனைக்காக கோவிலுக்குச் சென்றுள்ளார். இவரின் தாயார் ரீடா ஷர்மாவும் நடிகை என்பதால், மும்பையில் படப்பிடிப்பில் இருந்துள்ளார்.

வீட்டில் வீர் ஷர்மா தனது சகோதரருடன் தனியாக இருந்தபோது நள்ளிரவு 2 மணிக்கு தீ விபத்து நேர்ந்துள்ளது. சன்னல் வழியாகப் புகை வெளியே வருவதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு உள்ளே மூச்சுத் திணறலில் இருந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

எனினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர்கள் உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மும்பையில் உள்ள அவரின் தாயார் மருத்துவமனைக்கு வந்ததும் அவர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டன. குடும்பத்தின் விருப்பப்படி, சிறுவர்களின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.

 

(Visited 8 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்