இலங்கை

இலங்கை : புழக்கத்தில் இருக்கும் 6000 கார்கள் தொடர்பில் விசாரணை!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட சுமார் 6000 கார்கள் புழக்கத்தில் இருப்பது தொடர்பில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய சுங்க வரியை செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த வாகனங்களில் அடையாளம் காணப்பட்ட வாகனங்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இவ்வாறான வாகனங்கள் விசாரணைக்காக ஆணைக்குழுவினால் கையகப்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைக்காகவும் சுங்க வரிகள் மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்காகவும் இலங்கை சுங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அந்தந்த வாகனங்களின் ஒதுக்கீட்டாளர்கள் இரண்டாவது அல்லது அடுத்தடுத்த நிகழ்வுகளில் கடுமையான சிரமங்களை எதிர்கொள்வதையும் அவதானிக்க முடிந்தது.

அதற்கிணங்க, ஒரு தீர்வாக, உண்மையான வாங்குபவர் வாகனத்தை வாங்குவதற்கு முன்னர், இறக்குமதி வரிகள் மற்றும் பிற கட்டணங்கள் முறையாக செலுத்தப்பட்டதா என்பதை சரிபார்க்க, பொருத்தமான ஆன்லைன் அணுகலை எளிதாக்குவதற்கு ஆணைக்குழு இலங்கை சுங்கத்திற்கு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

அதன் பிரதிபலிப்பாக சுங்கத்துறை இணைய தளம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதுடன் இதன் ஊடாக ஒருவர் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் வாகனம் சட்டபூர்வமாக இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு சுங்க வரிகள் முறையாக செலுத்தப்பட்டுள்ளதா என்பதை சோதித்து பார்க்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தமக்கு சொந்தமான வாகனம் அல்லது வாங்க எதிர்பார்க்கப்படும் வாகனம் சட்டபூர்வமாக இறக்குமதி செய்யப்பட்டதா என்பதை அறிய பின்வரும் இணைப்பிற்குச் செல்வதன் மூலம் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழுவின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 2 times, 2 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்