இலங்கை – தெஹியோவிட்ட பகுதியில் நபர் ஒருவர் படுகொலை!

தெஹியோவிட்ட, திகல பிரதேசத்தில் ஒருவர் கோடரி மற்றும் கல்லால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (21.01) மாலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர் திகல தெஹியோவிட்ட பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர்.
இறந்தவர் குடித்துவிட்டு வந்து தனது சகோதரியுடன் தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். பின்னர், அவரது கணவர் வந்து கோடாரி மற்றும் கல்லால் இந்த நபரை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
43 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 22 times, 1 visits today)