பாலிவுட் நடிகரை காதலிக்கிறாரா அழகு பொம்மை ஸ்ரீலீலா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்தில் நாயகியாக நடிக்கும் ஸ்ரீலீலா, பாலிவுட் நடிகர் ஒருவரை காதலிப்பதாக தகவல் கசிந்துள்ளது.
கார்த்திக் ஆர்யன் தன்னை சிங்கிள்னு சொல்லிக்கிட்டாலும், சினிமாவுல நிறைய நடிகைகளோடு அடிக்கடி அவர் கிசுகிசுவில் சிக்கி வருகிறார். சமூக வலைதளங்களிலும் அவரோட ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் பத்தி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் நடிகை நோரா ஃபதேஹி ஒரு விருது விழாவில் கார்த்திக்கின் காதலி பற்றி சொல்லியுள்ளார்.
அந்த விழாவில் கார்த்திக் ஆர்யனின் தாய் மாலா திவாரி தனது வருங்கால மருமகளைப் பற்றி கூறுகையில், “குடும்பத்தின் தேவை என்னவென்றால், அவள் ஒரு நல்ல டாக்டராக இருக்க வேண்டும்.” இதன்மூலம், மாலா தனது மகன் கார்த்திக்கின் ஸ்ரீலீலாவுடனான உறவை உறுதிப்படுத்தியுள்ளார் என்று யூகிக்கப்படுகிறது.
ஏனெனில் ஸ்ரீலீலா தற்போது கார்த்திக்குடன் இயக்குனர் அனுராக் பாசுவின் வரவிருக்கும் காதல் படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலீலா எம்பிபிஎஸ் முடித்துள்ளார்.
இரண்டாவது விஷயம் என்னவென்றால், ஸ்ரீலீலா சமீபத்தில் கார்த்திக் ஆர்யனின் வீட்டில் நடந்த ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொண்டார், அதில் மிக நெருக்கமான குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
இந்த இணைப்புகளை இணைத்த பிறகு, மக்கள் கார்த்திக் மற்றும் ஸ்ரீலீலாவின் உறவைப் பற்றி ஊகிக்கிறார்கள். ஸ்ரீலீலா கார்த்திக் ஆர்யனை விட 11 வயது இளையவர்.