மாணவருக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய சிங்கப்பூர் ஆசிரியருக்கு சிறைதண்டனை
தம்மிடம் பயின்ற மாணவர் ஒருவருக்கு ஆபாசக் காணொளிகளைக் காட்டிய குற்றத்திற்காக சிங்கப்பூர் பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு 54 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது. அப்போது அந்த மாணவரின் வயது 17.
ஆசிரியர் தம்மிடம் ஆபாசக் காணொளிகளைக் காட்டியது குறித்து மாணவர் தன் தாயிடம் கூறினார். அதைத்தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்திடம் மாணவரின் தாய் புகார் கொடுத்தார்.
அதன் பின்னர் அந்த 49 வயது ஆசிரியரிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆசிரியரும் அவரது பணியில் இருந்து விலகினார்.
மாணவரின் மனவுளைச்சலைக் குறைக்க ஆபாசக் காணொளிகளைக் காட்டியதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் மீதான குற்றம் மார்ச் மாதம் நிரூபிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவருக்கு நேற்று தண்டனை விதிக்கப்பட்டது.
(Visited 12 times, 1 visits today)





