“கட்” சொல்லியும் விடாமல் kiss கொடுத்த சிம்பு – த்ரிஷா… மீண்டும் புகையும் நெருப்பு
 
																																		கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் தான் விண்ணை தாண்டி வருவாயா.
இந்த படத்தில் த்ரிஷா மற்றும் சிம்பு இடையிலான காதல் காட்சிகள் மிகவும் உணர்வுபூர்வமாக எடுக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் அந்த படத்தில் வரும் ஒரு முத்தக்காட்சி குறித்து பிரபல சினிமா விமர்சகர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் முன்பு பேசிய சில தகவல்கள் இப்போதும் மீண்டும் வைரலாக பரவி வருகின்றது.
இந்த படத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா முத்தமிடுவது போல ஒரு காட்சி அமைக்கப்பட்டிருக்கும், அதை தொடர்ந்து “மன்னிப்பாயா” என்ற சூப்பர் ஹிட் பாடலும் வரும். இந்நிலையில், அந்த முத்தக்காட்சியில் சிம்பு மற்றும் த்ரிஷா மெய்மறந்து இருந்ததாகவும், GVM கட் சொல்லியும் த்ரிஷா மற்றும் சிம்பு முத்தமிடுவதை நிறுத்தவில்லை என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

நடிகை த்ரிஷாவின் திரை வரலாற்றில் சில படங்கள் ஆண்டுகள் கடந்தும் அவரை ரசிக்கவைக்கும். அதில் ஒரு திரைப்படம் தான் கடந்த 2010ம் ஆண்டு பிரபல இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா திரைப்படம். ஜெசி என்ற கதாபாத்திரத்தில் மிக நேர்த்தியாக நடித்திருப்பார் த்ரிஷா.
இந்த திரைப்படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷாவை இணைத்து பெரிய அளவில் கிசுகிசுக்கள் வெளியானது அனைவரும் அறிந்ததே. 90ஸ் கிட்ஸ் மத்தியில் இன்றளவும் இந்த படத்திற்கும், இப்பட பாடல்களுக்கும் பெரிய அளவில் வரவேற்பு உள்ளது என்றால் அது மிகையல்ல. GVM இயக்கத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் இதுவும் ஒன்று.

 
        



 
                         
                            
