பொழுதுபோக்கு

சன் டிவி ரோஜா சீரியல் ஹீரோவின் புதிய அத்தியாயம்.. கதாநாயகி யார் தெரியுமா?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சுப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றுதான் ரோஜா. இந்த சீரியல் கடந்த 2022ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் ஹீரோவாக சிபு சூர்யன் என்பவர் நடித்திருந்தார். மேலும் கதாநாயகியாக பிரியங்கா நல்கெரி நடித்திருந்தார்.

ரோஜா சீரியல் முடிவுக்கு வந்த நிலையில், ஹீரோ சிபு சூர்யன் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா 2 சீரியலில் நடித்து வந்தார்.

இதில் விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா 2 முடிவுக்கு வர, சிபு சூர்யன் அடுத்ததாக இதுவரை எந்த ஒரு சீரியலிலும் நடிக்கவில்லை. இதனால் அவருடைய ரசிகர்களும் சற்று வருத்தத்தில் இருந்தனர்.

இந்நிலையில், தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம் சிபு சூர்யன். இந்த சீரியலில் கதாநாயகியாக வைஷ்ணவி நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை வைஷ்ணவி நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் துணை நடிகையாக நடித்திருந்தார். இதன்பின் பேரன்பு சீரியலில் கதாநாயகியாக நடித்து தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

தற்போது சிபு சூர்யன் உடன் இணைந்து ஜீ தமிழில் வரவிருக்கும் புதிய சீரியலில் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.

இந்த சீரியல் குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஜீ தமிழில் விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!