வெங்கட் பிரபுவுடன் இணைந்த சினேகா…. வெளியானது ட்ரெய்லர்

திருமணத்திற்கு பிறகு தனக்கான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து வரும் சினேகா இப்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து ஷாட் பூட் த்ரீ படத்தில் நடித்துள்ளார்.
குழந்தைகளின் சேட்டையை மையப்படுத்தி உருவாகி உள்ள இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
அருணாச்சலம் வைத்தியநாதன் இயக்கியிருக்கும் இப்படத்தை யுனிவர்ஸ் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது.
மேலும் பின்னணி இசை, ஒளிப்பதிவு அனைத்தையும் பார்க்கும் போது நிச்சயம் இது ஃபீல் குட் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குழந்தைகளை மையப்படுத்தி பல படங்கள் வெளிவந்தாலும் ஒவ்வொன்றும் புது அனுபவத்தை தான் கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஷாட் பூட் த்ரீ நிச்சயம் குடும்ப ஆடியன்ஸை கவரும்.
(Visited 11 times, 1 visits today)