திடீரென சிறிதாகிய மார்பகம்! பிரபல நடிகைக்கு நடந்தது என்ன?
மாடல் அழகியும், நடிகையுமான ஷெர்லின் சோப்ரா மார்பக அறுவை சிகிச்சை செய்து தனது மார்பகத்தை பெரிதாக்கி வைத்திருந்தார்.
இதனால் அவருக்கு நீண்ட காலமாக முதுகு, கழுத்து, மார்பு மற்றும் தோள் வலி காரணமாக தனது மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றிக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தேவையற்ற அதிக சுமையாக இருந்ததால், இந்த முடிவை எடுத்தேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

2005 ஆம் ஆண்டு வெளியான ‘டைம் பாஸ்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர், பின்னர் ‘ரெட் ஸ்வாக்’, ‘வாணி’, மற்றும் ‘காம்சூத்ரா 3டி’ போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

நடிகை ஷெர்லின் சோப்ரா, மார்பகத்தை பெரிதாக்குவதற்கான சில ஆண்டுகளுக்கு முன் அறுவை சிகிச்சை செய்து மார்பகத்தை பெரிதாக்கினார். ஆரம்ப காலத்தில் இதனால், எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாத நிலையில், கடந்த சில மாதங்களாக முதுகு, கழுத்து, தோள் வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதனால், அவதிப்பட்டு வந்த ஷெர்லின் சோப்ரா மார்பகத்தில் பொருத்தப்பட்டு இருந்த, இம்ப்ளாண்டுகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி உள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பதிவிட்டுள்ள அவர், வலிகள் அனைத்தும் நீங்கி, உடல்நலம் மிகவும் லேசாக இருப்பது போல உணர்கிறேன் என கூறியுள்ளார்.

இதேவேளை, அவர் பொருத்தியிருந்த இம்ப்ளாண்டுகளை கைகளில் வைத்துக்கொண்டு இதை கூறியுள்ளார்.
மேலும் இந்த இம்ப்ளாண்டுகளின் நிறை சுமார் 1.65kg எனவும் தெரிவிக்கப்படுகின்றது.






