இயக்குனர் ஷங்கரின் மகனை ஹீரோவாக்கும் அட்லீ..

அட்லீ இயக்கியது குறைந்த படங்களே என்றாலும் இவர் அடைந்த வெற்றி பெரியது. இவர் காலம்தாழ்த்தி படங்களை கொடுத்தாலும் தரமானதாக கொடுப்பார் என பெயர் எடுத்தவர்.
இவர் தமிழில் “ராஜா ராணி”, “தெறி”,”மெர்சல்”, “பிகில்” ஆகிய படங்களும், இறுதியாக “ஜவான்” என்ற இந்தி படத்தையும் இயக்கிருந்தார். இதற்கு அடுத்து சல்மான்கான் மற்றும் விஜய் சேதுபதியை வைத்து படம் பண்ணப்போவதாக தகவல்கல் சில நாட்களுக்கு முன்பு வெளிவந்துள்ளன.
இவர் இவ்வாறு உருவெடுத்து நிற்க காரணம் இயக்குனர் ஷங்கர். அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக சிலகாலம் பணியாற்றியவர். அதற்கு பிறகுதான் இவர் “ராஜா ராணியை” இயக்கியுள்ளார்.
அட்லீயிடமும் நிறைய உதவி இயக்குனர்கள் பணியாற்றி வருகிறார்கள். அதில் ஒரு உதவி இயக்குனர் ஷங்கரின் மகன் “அர்ஜித் ஷங்கர்” ஹீரோவாக அறிமுகம் செய்து படம் எடுக்க போகிறாராம்.
இந்த படத்தை “passion studios” தயாரிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதிக்குள் தொடங்கும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன. தன் குருவிற்காக இந்த வாய்ப்பை அட்லீதான் உருவாக்கி கொடுத்துள்ளார் என திரை வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.
தன்னை வளர்ந்து விட்ட குருவிற்காக கைம்மாறு செய்வதற்காக இந்த வாய்ப்பை அட்லீ உருவாக்கி கொடுத்துள்ளார். இந்த நன்றி தற்போது சில இயக்குநர்களிடமும், நடிகர்களிடமும் இல்லை எனவும் சில திரை பிரபலங்கள் பேசிக்கொள்கிறார்களாம்.