ரோகிணி திரையரங்கில் ‘குட் பேட் அக்லி’ படத்தை பார்த்த ஷாலினி

அஜித் நடிப்பில் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள, ‘குட் பேட் அக்லி’ படத்தை அவரின் மனைவி ஷாலினி, மகளுடன் சேர்ந்து ரோகிணி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக இருக்க கூடிய நடிகர்களில் ஒருவர் தான் அஜித் குமார்.
அதன்படி, இவர் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆனது. இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த படத்தை, லைகா நிறுவனம் தயாரித்திருந்த நிலையில் கலவையான விமர்சனங்களுடன் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது.
இந்த படம் வெளியான 2 மாதத்தில், இன்று அஜித் நடிப்பில் வெளியாகி உள்ள மற்றொரு திரைப்படம் தான் ‘குட் பேட் அக்லி’.
முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ஆக்ஷனோடு கூடிய செண்டிமெண்ட் படமாக இப்படம் இருக்கும் என ஆதிக் ரவிச்சந்திரன் கூறி இருந்தார்.
‘குட் பேட் அக்லி’ படத்தின் ட்ரைலர் கடந்த வாரம் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. ஒரு சிலர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்கள் ட்ரைலருக்கு கிடைத்த போதும் பக்கா மாஸாக இருப்பதாகும் ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு தமிழகத்தில், முதல் காட்சி போடப்பட்ட நிலையில் ரசிகர்கள் ஆரவாரத்தோடு படத்தை கண்டு ரசித்து வருகிறார்கள்.
சென்னையில் உள்ள பல திரையரங்குகளில், ரசிகர்களோடு இணைந்து பல பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்து வரும் நிலையில், அஜித்தின் மனைவி ஷாலினி தன்னுடைய கணவர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி படத்தை’ மகளுடன் சென்று கண்டு ரசித்துள்ளார்.
ரசிகர்களோடு சேர்ந்து இவர் படம் பார்த்த போது எடுக்கப்பட்ட வீடியோஸ் மற்றும் போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படம், தொடந்து கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. அதே நேரம் ரசிகர்களுக்கு ஏற்ப எடுக்கப்பட்டிருந்தாலும் கொஞ்சம் கிரிஞ்சாக உள்ளதாகவே கூறி வருகிறார்கள்.
இந்த படத்தில் ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து திரிஷா ஹீரோயினாக நடிக்க, அர்ஜுன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.