இலங்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிரதேச அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இன்று செயற்படாது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை விரைவில் சரிசெய்து, பொதுச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

Mahi

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!