பொழுதுபோக்கு

செந்திலுக்கு ஜோடியானார் ஜோதிகா… மகிழ்ச்சியின் உச்சத்தில் செந்தில், காரணம் என்ன தெரியுமா?

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொடர் என்றால் அது சரவணன் மீனாட்சி தான். மிர்ச்சி செந்திலும், ஸ்ரீஜாவும் ஜோடியாக நடித்திருந்த இந்த சீரியல் சக்கைப்போடு போட்டது. அதிலும் இந்த சீரியல் மூன்று சீசன்களாக நடத்தப்பட்டது.

இதன் முதல் சீசனில் தான் செந்தில் நாயகனாக நடித்திருந்தார். அந்த சீரியலின் பலமே செந்தில் ஸ்ரீஜாவின் கெமிஸ்ட்ரி தான்.

சீரியலைப் போல் ரியல் லைபிலும் இவர்கள் இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

சரவணன் மீனாட்சி தொடருக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வந்த செந்திலும் பெரியளவில் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் அவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கமே திரும்பி உள்ளார். தற்போது இவர் நடிப்பில் அண்ணா என்கிற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

அண்ணன் – தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த தொடர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.

இப்படி சீரியல் மட்டுமின்றி விளம்பரங்களிலும் நடித்து வரும் மிர்ச்சி செந்தில், அண்மையில் பிஸ்கட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதுகுறித்து உற்சாகம் பொங்க அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதற்கு காரணம், அந்த விளம்பரத்தில் அவர் ஜோதிகாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை நடிகரும், இயக்குனருமான கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

அந்த விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ள மிர்ச்சி செந்தில், மற்றுமொரு சுவாரஸ்ய தகவலையும் பகிர்ந்துள்ளார்.

அது என்னவென்றால் அந்த விளம்பரத்தில் ஹீரோவாக நடித்த தனக்கும், ஹீரோயினாக நடித்த ஜோதிகாவுக்கும், இதனை இயக்கிய கிஷோருக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்று குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மூவரும் அக்டோபர் மாதம் 18-ந் தேதி பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!