புது வாழ்க்கையை தொடங்கிய சரண்யா பொன்வண்ணனின் மகள் – பிரபலங்கள் பலரும் வாழ்த்து
நடிகை சரண்யா பொன்வண்ணனின் இளைய மகள் சாந்தினிக்கு ஒக்டோபர் மாதம் டானி பிலிப் பாபு என்பவருடன் ஊட்டியில் நிச்சயதார்த்தம் நடந்தது.
இதையடுத்து 02 ஆம் திகதி கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு தேவாலயத்தில் எளிமையாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.
‘இதனையடுத்து, நேற்று சென்னை கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது துணைவியாருடன் கலந்து கொண்டார்.
மேலும், நடிகர் சூர்யா, கார்த்தி, சசிகுமார், தனுஷ், சசிகுமார், அருண்குமார்,ஜீவா, விஜய்சேதுபதி, சத்யராஜ், விஜயகுமார், சினேகா, பிரசன்னா, பிரபு, விக்ரம் பிரபு,
எம்.எஸ்.பாஸ்கர், பார்த்திபன், நாசர், சரத்குமார், பாக்யராஜ், இளவரசு, தலைவாசல் விஜய், இயக்குநர்கள் மணிரத்னம், சேரன், கேஎஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
இரண்டு மகள்களுக்குமே திருமணத்தையும் முடித்திருக்கும் மகிழ்ச்சிகள் இருக்கும் சரண்யா பொன்வண்ணனுக்கு இணையத்தில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



