காணாமல் போன சாய் பல்லவி… என்ன ஆச்சி?
கிளாமர் இன்றி ட்ரெடிஷ்னல் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர் தான் நடிகை சாய் பல்லவி. ஒரு படத்தில் சாய் பல்லவி இருந்தாலே அவரை நம்பி போகலாம் என்ற நம்பிக்கையை உருவாக்கியிருக்கிறார்.
கவர்ச்சியான வேடங்களில் நடிக்க மாட்டேன் என்று கண்டிப்பான கொள்கையுடன் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து புகழ் பெற்றார்.

அமரன் படத்திற்கு பின் சாய் பல்லவி தமிழில் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகவில்லை.
சமீபத்தில் சாய் பல்லவிக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்த நிலையில் சாய் பல்லவி எந்தவொரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து கேள்விகள் எழுப்பட்டு வருகிறது.

சமீபத்தில் தன்னுடைய சகோதரி பூஜா கண்ணனுடன் இணைந்து நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது
தற்போது ஹிந்தியில் உருவாகும் வரலாற்று படத்தில் சீதையாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
அமரனுக்குப் பிறகு சாய் பல்லவி தமிழ் சினிமா பக்கம் காணாமல் போய்விட்டார்.





