மெக்சிகோவில் தேவாலயமொன்றில் உடைந்து வீழ்ந்த மேற்கூரை – இடிபாடுகளில் சிக்கிய மக்கள்

மெக்சிகோவில் உள்ள தேவாலயமொன்றின் மேற்கூரை உடைந்து வீழ்ந்துள்ளது.
இதனால் பலர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மெக்சிகோவின் கடலோர மாநிலமான தமௌலிபாஸில் உள்ள செண்டா குரூஸ் தேவாலயத்தின் கூரை உடைந்து வீழ்ந்ததில் பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த அனர்த்தத்தில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த தேவாலயத்தின் மதிய வேளையில் இடம்பெற்ற ஞானஸ்நானத்தின் போது அந்த தேவாலயத்தின் கூரை உடைந்து விழுந்ததாக கூறப்படுகிறது.
குறித்த அனர்த்தத்தில் சிக்குண்டவர்களில் பல சிறார்கள் உள்ளடங்குவதாகவும் அங்கு தொடந்து மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் குறித்தப் பகுதியில் அவசர தேவைகள் தாமதமாக இடம்பெறுவதாக மெக்சிக்கோ தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.
(Visited 17 times, 1 visits today)