ஐரோப்பா

ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு கோரிக்கை

ரஷ்யாவுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைக்குமாறு வெளிநாடுகள் சில வெளியுறவு அமைச்சிற்கு ஆலோசனை விடுத்துள்ளது.

தென் ரஷ்யாவின் நிலையற்ற பாதுகாப்புச் சூழல் நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்பதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மைய மாதங்களில் ரஷ்யாவின் சில இடங்களில் குண்டுவீச்சு, ஆளில்லா வானூர்தித் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ரஷ்யாவில் உள்ள வெளிநாட்டவர்கள், மாநிலங்களிடையே பயணம் செய்வதைத் தற்போதைக்குத் தவிர்க்கும்படி அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சு கேட்டுக்கொண்டது.

ரஷ்ய-உக்ரேன் பூசல் தொடர்வதால் உக்ரேனுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படியும் வெளியுறவு அமைச்சு அறிவுறுத்தியது.

விழிப்புடன் செயல்பட்டு உள்ளூர்ச் செய்திகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று அது கூறியது.

மக்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யத் தேவைப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்