கிம் ஜாங் உன்னின் சகோதரியிடமிருந்து அமெரிக்காவிற்கு சிவப்பு எச்சரிக்கை
வட கொரியா தனது நாட்டை உலகின் மிகப்பெரிய மற்றும் வலிமையான இராணுவ சக்தியாக மாற்றும் என்று வலியுறுத்தியுள்ளது.
அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங், தனது நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதியை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த ஆண்டு பாரிய இராணுவ பயிற்சியை ஆரம்பிக்க தென்கொரியா தயாராகவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
100 விமானங்களைப் பயன்படுத்தி பாரிய இராணுவப் பயிற்சியை நடத்த தென்கொரியா திட்டமிட்டுள்ளது.
இது பிராந்திய பாதுகாப்பு சூழலை ஆபத்தான கொந்தளிப்பிற்கு தள்ளும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கூறியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)