ரவி மோகன் தான் நம்பர் 1 – புகழ்ந்து தள்ளும் கெனிஷா, ஆதங்கத்தை கொட்டி தீர்த்த ஆர்த்தி
‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் 1” என அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.
சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.
சென்னை – காசி திரையரங்கில் இரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் சென்றிருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது,
“அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன..அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 06 மாதங்கள் கடுமையாக உழைத்தார்.
என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.
இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் 1. முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2 ஆம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” எ கெனிஷா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரவி மோகன், பராசக்தி ஆடியோ லான்சின் போது, பராசக்தி படத்தில் நான் நடித்ததற்கு முக்கிய காரணம், சுயமரியாதையை காப்பாற்ற போராடும் படம், நானும் என் வாழ்க்கையில் சுயமரியாதையை காப்பாற்ற போராடினேன் என்று பேசியிருந்தார்.
அவர் பேசியது தன்னுடைய வாழ்க்கையில் சந்தித்த பிரச்சனைகளை வைத்து பேசியிருக்கிறார் என்ற பேச்சுக்கள் எழுந்தன. இந்நிலையில் ஆர்த்தி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு க்யூட்டான போட்டோஷூட்டுடன் ஒரு கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
அதில், சுயமரியாதை மற்றும் கொடுமை பற்றிய குற்றச்சாட்டுக்கள் பெரும்பாலும் ஆதாரமில்லாமல் சுமத்தப்படுகிறது. இப்படி சொல்பவர்கள் எப்போதும் தான் சொல்வதுபடி வாழ்வதில்லை. ஆனால், துரோகம் ஆதாரங்களுடன் வரும், மேடை என்பது நடிப்பதற்காக, ஆனால் நிஜ வாழ்க்கைக்கு நேர்மை தேவை.
ஒருவர் மற்றவர்மீது பழிச்சுமத்த மேடையை பயன்படுத்தும்போது அது வெளிச்சத்தில் இருப்பவர்களைவிட பழி சுமத்துபவரை பற்றியே அதிகம் சொல்கிறது. ஒருநாள் அவளுக்கும் அதே மேடையை பயன்படுத்தும் வாய்ப்பு வரும். அந்த நாள் நடிப்பாக இருக்காது, அது உண்மையின் வெளிப்பாடாக இருக்கும்.
அந்தநாள் அருகில்தான் இருக்கிறது. அவள் நம்பிய ஒரு நாயகனை ஒருகாலத்தில் காதலித்திருக்கலாம், ஆனால் பின் அவளறிந்த வில்லனிடமிருந்து தப்பி உயிர் பிழைக்கிறாள். எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக அவள் தன் சுயமரியாதையை நிலைநிறுத்துகிறாள் என்று ஆர்த்தி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.





