ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா? புதிய அப்டேட்
ரஜினிகாந்தின் 173ஆவது திரைப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, சுந்தர்.சி இயக்க இருப்பதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், திடீரென இந்த படத்தில் இருந்து விலகுவதாக இயக்குநர் சுந்தர்.சி அறிவித்தார்.
சுந்தர்.சி விலகலை அடுத்து ரஜினி – கமல் கூட்டணியில் உருவாகும் படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
இதில், கே.எஸ்.ரவிக்குமார் இந்தப் படத்தை இயக்குவதில் முன்னணியில் இருக்கிறார் எனச் சொல்லப்பட்டது.

இதற்கிடையே, ரஜினியை வைத்து ‘பேட்ட’ படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் பெயரும் பேசப்பட்டது.

இந்நிலையில் தான் இளம் இயக்குநர் ஒருவர் ரஜினியை இயக்கும் வாய்ப்பை பெறலாம் என்கிறது தமிழ் சினிமாவின் தற்போதைய தகவல்.
அவர், பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன்.
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்தை பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ராம்குமார் பாலகிருஷ்ணனின் கதைக்கு பச்சைக் கொடி காட்டியதாகவும் விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தவிர, ‘மகாராஜா’ படத்தை இயக்கிய இயக்குநர் நித்திலனும் ரஜினிக்கு கதை ஒன்றை கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த இருவரில் ஒருவர் தான் இயக்குநராக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும், இன்னும் சில தினங்களில் ரஜினியின் பிறந்தநாள் வரவிருக்கிறது, அந்த நாளில் இயக்குநர் யார் என்பது குறித்த அறிவிப்பினை அறிவிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.





