பொழுதுபோக்கு

ரஜினியுடன் விஜய்.. திடீரென இணையத்தில் ட்ரெண்டாகும் ஒற்றை புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை நெல்சன் இயக்கியுள்ளார்.

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் விஜய் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் என சொல்லப்பட்டது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் விஜய் இருக்கும் போட்டோ டிவிட்டரில் திடீரென ட்ரெண்டாகி வருகிறது.

இதற்காக சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து விஜய்யிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

ஆனாலும், ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கலந்துகொள்வது குறித்து இன்னும் உறுதியாக தெரியவில்லை. இதனிடையே கோலிவுட்டில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து கடந்த சில வருடங்களாக பரபரப்பான கன்டென்ட்டாக வலம் வருகிறது.

யார் என்ன சொன்னாலும் நான் தான் ஆல்டைம் சூப்பர் ஸ்டார் என ஜெயிலர் படம் மூலம் கம்பேக் கொடுத்து நிரூபிக்க உள்ளார் ரஜினிகாந்த். அதேபோல் அக்டோபரில் வெளியாகவுள்ள லியோ திரைப்படமும் விஜய்க்கு சூப்பர் ஹிட்டாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

See also  ரஜினிக்கு நடந்தது என்ன? மனைவி வெளியிட்ட செய்தி - அதிர்ச்சியில் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துகளுக்கு மத்தியில் ரசிகர்களுக்கு ஷாக்கிங் கொடுக்கும் விதமாக ஒரு போட்டோ திடீரென வைரலாகி வருகிறது.

அதில், சூப்பர் ஸ்டார் ரஜினி முன்பு விஜய் பவ்யமாக கை கட்டி நிற்கிறார். அதாவது எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ரஜினி கை குலுக்கியபடி பேசிக் கொண்டிருக்க, அவர்கள் அருகே விஜய் அமைதியாக சிரித்துக்கொண்டே நிற்கின்றார்.

இந்தப் போட்டோ சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த போட்டோவை ரஜினி ரசிகர்கள் திடீரென ட்ரெண்ட் செய்து வருவது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content