படம் ஓடவில்லை : ஹீரோக்களை குறை கூறும் ஹீரோயின்கள்
தமிழில் பல ஹிட் படங்களை கொடுத்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
சமீபத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான De De Pyaar De 2 படத்தில் முக்கிய ரோலில் நடித்து 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனை அள்ளியுள்ளார்.
இந்த நிலையில் பேட்டியொன்றில் கலந்து கொண்டு பேசிய இவர்,
“ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ஸ்பைடர் படத்தில் நடிக்கப்போகிறோம் என்ற வாய்ப்பு வந்து கமிட் பண்ணும்போது ரொம்ப பெருசாக நினைத்தேன். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது எனக்கு மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்தது.
அதற்கு முன் ராம்சரண், ஜூனியர் என் டி ஆர் என டோலிவுட் ஸ்டார் படங்களில் வரிசையாக 8 ஹிட் படங்களை கொடுத்த நிலையில், கிடைத்த பெரிய வாய்ப்பு கடைசியில் ஃபிளாப்பாகி விட்டது.
சினிமாவில் வெற்றி, தோல்வி ஒரு அங்கமாக இருக்கும் என்பதை அப்போதுதான் புரிந்துக்கொண்டேன் என்று ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார்.
இவர் மட்டும் அல்ல, கோட் படத்தில் நடித்த நடிகை மீனாட்சி சவுத்திரியும் விஜய்யிள் கோட் படத்தில் நடித்தது தேவையற்ற ஒன்று என்று குறிப்பிட்டிருந்தார்.
அதேபோல் நடிகை தமன்னாவும் விஜய்யின் 50ஆவது படமான சுறா படத்தில் நடித்ததை விமர்சித்திருந்தார்.





