பொழுதுபோக்கு

புஷ்பா 2 ரிலீஸ் தேதி வெளியானது.. போஸ்டருடன் வந்த மாஸ் அறிவிப்பு

அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் இந்தியாவில் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தியது. தெலுங்கு ரசிகர்களை தாண்டி தமிழ் மற்றும் இந்தி ரசிகர்களையும் புஷ்பா திரைப்படம் கவர்ந்த நிலையில் புஷ்பா 2 திரைப்படத்தை இயக்குநர் சுகுமார் பிரம்மாண்டமாக சில ஆண்டுகளாக உருவாக்கி வருகிறார்.

அஜித்தின் குட் பேட் அக்லி படத்தை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பெரிய பொருட்செலவில் உருவாக்கப்பட்டு வரும் புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அதன் ரிலீஸ் தேதியில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புஷ்பா 2 திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு இறுதிவரை அந்த படம் இழுத்து அடிக்கப்பட்டதற்கு காரணம் அல்லு அர்ஜுன் மற்றும் படத்தின் இயக்குநர் சுகுமார் இடையே ஏற்பட்ட ஈகோ பிரச்சனை தான் என ஏகப்பட்ட தகவல்கள் பரவின.

படத்தை முடிக்காமல் சுகுமார் ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு சென்றதாகவும், சுகுமார் வந்தவுடன் அல்லு அர்ஜுன் ஒரு பக்கம் வெளிநாட்டுக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகி புஷ்பா 2 திரைப்படமே வெளியாகுமா என்கிற கேள்வியை எழுப்பியது.

See also  பாக்கவே நல்லா இருக்கே... இந்த ஜோடி இணையாம போனதுக்கு இப்படி ஒரு காரணமா?

புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக புஷ்பா 2 திரைப்படம் டிசம்பர் 5ம் தேதியை வெளியாகிறது என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது.

டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை என்பதால் அன்றைய தினத்தில் படத்தை வெளியிட்டால், தொடர்ந்து 4 நாட்கள் வசூல் வேட்டை நடத்த படக்குழு திட்டம். மேலும், புஷ்பா 3 திரைப்படமும் விரைவில் வரும் என்றும் படத்தின் தயாரிப்பாளர்கள் உறுதி அளித்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content