பொழுதுபோக்கு

இணையத்தில் வைரலாகி வரும் பூக்கி படத்தின் புடிக்கலே  பாடல்

பூக்கி படத்தில் இடம்பெற்றுள்ள புடிக்கலே புடிக்கலே பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் “பூக்கி”.

இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கும் இந்தப் படத்தின் மூலம் நடிகர் அஜய் திஷன் நாயகனாக அறிமுகமாகின்றார். இவர் மார்கன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பூக்கி படத்தில் நாயகியாக தனுஷா நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி, சுனில், பாண்டியராஜன், விவேக் பிரசன்னா, ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி இசையமைக்கும் இந்தப் படம் வரும் பிப். 13 ஆம் திகதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், பூக்கி படத்தின் புதிய பாடலான புடிக்கலே புடிக்கலே பாடல் இன்று இணையத்தில்  வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்தப் பாடலை சந்தோஷ் ஹரிஹரன், ருக்சார் பந்துகியா ஆகியோர் பாடியுள்ளனர். வரிகளை லவரதன் எழுதியுள்ளார்.

இரு காதலர்களுக்கிடையே நடக்கும் பிரச்சினைகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்து பூக்கி திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Sainth

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!