மாகாணசபைத் தேர்தல் நடக்காது: ராஜித கருத்து!
“மாகாணசபைத் தேர்தலை தேசிய மக்கள் சக்தி NPP அரசாங்கம் நடத்தாது.” என அடித்துக் கூறியுள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“உள்ளாட்சிசபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு பின்னடைவு ஏற்பட்டது. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசுக்குரிய வாக்குவங்கி மேலும் வீழ்ச்சியடையும். எனவே, மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படுமா என்பது சந்தேகமே.
தோல்வியென தெரிந்தும் அதனை எதிர்கொள்வதற்கு ஆளுங்கட்சி முன்வராது என்றே தெரிகின்றது.
தேர்தல் ஆணைக்குழு அனுப்பிய கடிதத்துக்கு பதில் இல்லை. சட்ட திருத்தத்தை மேற்கொள்வதற்கும் ஆளுங்கட்சி முனைப்பு காட்டவில்லை.இதன்மூலம் தேர்தல் நடக்காது என்பது புலனாகின்றது.” –எனவும் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.




