பொழுதுபோக்கு

போர் தொழில் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி!! கெத்து காட்டிய படக்குழு

அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் கேரளாவில் செய்த லைப் டைம் வசூல் சாதனையை போர் தொழில் திரைப்படம் முறியடித்து கெத்து காட்டி உள்ளது.

தமிழ் சினிமாவுக்கு 2023ஆம் ஆண்டு ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு இளம் இயக்குனர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன.

இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் தான் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.

ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் பிரபாஸின் ஆதிபுருஷ் போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது அப்படம் நிகழ்த்தியுள்ள ஒரு சாதனை, சற்று வியப்பளிக்கக்கூடிய ஒன்று தான். போர் தொழில் படம் தமிழ்நாட்டைப் போல் கேரளாவிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தற்போது போர் தொழில் திரைப்படம் முறியடித்து உள்ளது.

கேரளாவில் அஜித்தின் துணிவு படம் வசூலித்த லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் ரூ.5 கோடியாம். தற்போது போர் தொழில் திரைப்படம் ரூ.5.1 கோடி வசூலித்து துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. புதுமுக இயக்குனரின் படம் அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content