அமைதி ஒப்பந்தம் – ட்ரம்பிற்கு வழங்கப்படும் இஸ்ரேலின் உயரிய விருது!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் உரையாற்றி சிறப்பு அறிக்கை வெளியிட உள்ளதாக ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமைதி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதற்காக ட்ரம்பிற்கு இஸ்ரேலின் மிக உயர்ந்த விருதும், பதக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் டிரம்ப் ஹமாஸ் வசமிருந்து விடுவிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக அவர் இஸ்ரேலில் உள்ள பென் குரியன் விமான நிலையத்திற்கு வருகை தந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, காசா அமைதி மாநாட்டில் கலந்து கொள்ள டிரம்ப் எகிப்துக்குச் செல்ல உள்ளார்.
இந்த மாநாட்டில் எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல்-சிசி (Abdel Fattah al-Sisi,) பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் (Emmanuel Macron), பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் (Keir Starmer) ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜி மெலோனி (Giorgio Meloni) ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) மற்றும் ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் (Antonio Guterres)ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.