05 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக லண்டனுக்கு விமான சேவையை ஆரம்பித்த பாகிஸ்தான்!
பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் 05 ஆண்டுகளில் முதல் முறையாக பிரித்தானியாவிற்கு தனது சேவைகளை தொடங்கியுள்ளது.
போலி விமானி உரிம ஊழல் தொடர்பாக விமான நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
கராச்சியில் ஏற்பட்ட கொடிய விபத்தில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் விமானிகள் போலி உரிமங்களுடன் பறப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இங்கிலாந்திற்கு விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு இதற்கான தடை நீக்கப்பட்டது.
இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் (Islamabad) இருந்து மென்செஸ்டருக்கு (Manchester) முதல் போயிங் 777 விமானம் பல மாத ஆய்வுகள் மற்றும் சீர்திருத்தங்களுக்குப் பிறகு இன்று தனது முதல் சேவையை ஆரம்பித்துள்ளது.
மென்செஸ்டருக்கு (Manchester) விமானம் செல்வது ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கமாகும், ஆனால் அடுத்ததாக லண்டன் (London) மற்றும் பர்மிங்காமுக்கு (Birmingham) விமானங்களைத் தொடங்க நாங்கள் உறுதியாக இருக்கிறோம்” என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் (Khawaja Mohammad Asif) தெரிவித்துள்ளார்.





