ஐரோப்பா செய்தி

கன்சர்வேடிவ் கட்சிதான் உண்மையான வலதுசாரி – கெமி படெனோக்

பிரித்தானியாவில் வலதுசாரி அரசியலில் போட்டி அதிகரித்துள்ள நிலையில், “உண்மையான வலதுசாரிக் கட்சி கன்சர்வேடிவ் கட்சிதான்” என அக்கட்சி தலைவர் கெமி படெனோக் வலியுறுத்தியுள்ளார்.

சீர்திருத்தக் கட்சி ஏற்படுத்தும் சவாலுக்கு மத்தியில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

நைஜல் ஃபாரேஜ் தலைமையிலான அரசியல் நிலைப்பாடு, பெரிய அரசையும் அதிக செலவுகளையும் ஆதரிப்பதாக அவர் குற்றம் சுமத்தினார்.

மேலும், கன்சர்வேடிவ் கட்சி வரிகளை குறைப்பது, முத்திரை வரி மற்றும் வணிக வரிகளை குறைப்பது போன்ற கொள்கைகளை முன்னெடுத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

சீர்திருத்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து எழுந்த கேள்விக்கு பதிலளித்த படெனோக் , தற்போதைய சூழலில் ஒப்பந்தங்களைப் பற்றி பேசுபவர்கள் பொதுமக்களின் நலனை விட தனிப்பட்ட அரசியல் இலாபத்தை முன்னிலைப்படுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!