இனி ஒரே நேரத்தில் 2 – கூகுள் ப்ளே ஸ்டோரில் புதிய வசதி
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு சிறந்த ஆப் ஸ்டோராக கூகுள் ப்ளே ஸ்டோர் உள்ளது. பலரும் இந்த ஆப்-ஐ பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய செயலிகளை டவுன்லோடு செய்து வருகின்றனர். எனினும் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் ஒரு ஆப் மட்டுமே டவுன்லோடு செய்ய முடியும். இது பலருக்கும் கடினமாக இருந்து வந்தது. பயனர்கள் இதுகுறித்து கோரிக்கைகளும் வைத்து வந்தனர்.
இந்நிலையில், நிறுவனம் இதற்கு தீர்வு கொடுத்துள்ளது. ஒன்று இல்ல 2 இல்ல ஒரே நேரத்தில் பல்வேறு ஆப் டவுன்லோடு செய்யலாம். கூகுள் ப்ளே ஸ்டோர் புது அப்டேட் மூலம் நீங்கள் இதை செய்ய முடியும். இந்த அம்சம் தற்போதுஅனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு பயனர்கள் இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரே நேரத்தில் 2 அல்லது 3 செயலிகள் டவுன்லோடு செய்யலாம். சமீபத்திய ப்ளே ஸ்டோர் வெர்ஷனுக்கு அப்டேட் செய்து பயன்படுத்தலாம். கூகுள் ப்ளே v40.6.31 or சமீபத்திய வெர்ஷனில் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம் என நிறுவனம் கூறியுள்ளது.