ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிப்பு!
ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதையடுத்து, உலகின் முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கோபுரத்தை கட்டிய பொறியாளர் குஸ்டாவ் ஈஃபிலின் 100வது ஆண்டு நினைவு நாளில் நடந்த வேலைநிறுத்தம், “தற்போதைய நிர்வாக முறைக்கு” எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரிஸின் மிகவும் பிரபலமான அடையாளமான ஈபிள் கோபுரம் ஆண்டுக்கு ஏறக்குறைய ஏழு மில்லியன் பார்வையாளர்களை ஈர்க்கிறது, அவர்களில் முக்கால்வாசி பேர் வெளிநாட்டினர் ஆவர்.
(Visited 6 times, 1 visits today)