அரசியல் நகைச்சுவையாக மாறியுள்ள “நம்பிக்கையில்லாப் பிரேரணை”!
நம்பிக்கையில்லாப் பிரேரணை என்பதை அரசியல் நகைச்சுவையாக எதிரணி மாற்றியுள்ளது என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa தெரிவித்தார்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படும் என அறிவித்த எதிரணி, அதனை இன்னும் சபாநாயகரிடம் கையளிக்கவில்லை.
இந்நிலையில் சபாநாயகருக்கு எதிராகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என எதிரணி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போது கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
“ முதலில் பிரதமருக்கு எதிரான பிரேரணைiயை முன்வைக்கட்டும். கையொப்பம் திரட்டி நாடகம் ஆடுவதுடன் நின்றுவிடாது நடவடிக்கையில் இறங்க வேண்டும்.” – என்றார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை உரிய நேரத்தில் கையளிக்கப்படும் என எதிரணி SJP கூறினாலும், கால எல்லை பற்றி கருத்துகூற மறுத்துவருகின்றது.





