சிறுவர்களுக்கு சமூக ஊடகத்தை தடை செய்ய நியூசிலாந்து திட்டம்

16 வயதுக்குக் கீழுள்ள சிறுவர்களின் சமூக ஊடகத்தைத் தடை செய்ய நியூசிலாந்து பிரதமர் Christopher Luxon பரிந்துரைத்துள்ளார்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரின் வயது குறைந்தது 16ஆக இருப்பதை நிறுவனங்கள் உறுதிசெய்ய வேண்டும்; தவறினால் அவற்றுக்கு 1.2 மில்லியன் டொலர் வரை அபராதம் விதிக்கப்படும் என்ற பரிந்துரையை அவர் முன்வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியா விதித்துள்ள தடையை மாதிரியாகக் கொண்டு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வன்முறை, மனத்தைப் பாதிக்கக்கூடிய தகவல்கள் நிரம்பி வழிகின்றன. அதனால் பிள்ளைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கூறினார்.
Luxon முன்வைத்த சட்ட நகல் எப்போது நாடாளுமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் தெரியவில்லை.
(Visited 1 times, 1 visits today)