விஜய் டிவியில் விரைவில் புது சீரியல்…

சீரியல்கள் என்றால் முதலில் மக்களுக்கு நினைவு வருவது சன் டிவி தான். ஆனால் இப்போது அவர்களையே திக்குமுக்காட வைக்கும் வகையில் விஜய், ஜீ தமிழ், கலைஞர் என பல தொலைக்காட்சிகள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன.
மக்களும் இப்போது அனைத்து தொலைக்காட்சி சீரியல்களுக்கும் வரவேற்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இந்நிலையில் விஜய் டிவியில் விரைவில் புது தொடர் ஒன்று வர உள்ளது. ஸ்டார் மா சேனலில் வரும் Maguva O Maguva சீரியலின் தமிழ் ரீமேக் தான் இந்த சீரியல்.
இதில் நாயகியாக நீ நான் காதல் புகழ் வர்ஷினி மற்றும் பாக்கியலட்சுமி சீரியல் ராதிகாவாக நடித்த ரேஷ்மாவும் மெயின் ரோலில் நடிக்கவுள்ளனர்.
(Visited 4 times, 1 visits today)