பொழுதுபோக்கு

கவினுடன் காதல் செய்யும் நயன்… வெளியான புகைப்படத்தை பார்த்தீர்களா?

முன்னணி நாயகனாக மாறியுள்ள கவினுக்கு வயது 34. கடந்த 1990ம் ஆண்டு பிறந்த நடிகர் கவின், 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான “கனா காணும் காலங்கள்” என்கின்ற சீரியல் மூலம் தனது கலை உலக பயணத்தை தொடங்கினார்.

தொடர்ச்சியாக அவர் பல நல்ல சீரியல்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு கடந்த 2017ம் ஆண்டு தமிழ் மொழியில் வெளியான “நட்புன்னா என்னன்னு தெரியுமா” என்கின்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் கவின்.

தொடர்ச்சியாக “லிப்ட்”, “டாடா” மற்றும் “ஸ்டார்” போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்தார். இப்பொழுது லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு ஜோடியாக ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வயதில் மூத்த பெண்ணின் மீது ஏற்படும் காதல் குறித்த அந்த திரைப்படத்தை, லோகேஷ் கனகராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விஷ்ணு என்பவர் இயக்கும் நிலையில், நயன்தாரா மற்றும் கவின் ஆகிய இருவரும் அந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இப்பொது அந்த திரைப்படத்திலிருந்து ஒரு புகைப்படத்தை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content