பொழுதுபோக்கு

சீமானின் மகளாக நயன்தாரா… காத்திருக்கும் புது சப்ரைஸ்…

நடிகை நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு தந்தையாக சீமான் நடிக்க உள்ளாராம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுக்கு 2023-ம் ஆண்டு சினிமாவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஆண்டாகவே இருந்தது. கடந்த ஆண்டு ஜவான் என்கிற ஆயிரம் கோடி வசூல் திரைப்படத்தை கொடுத்து பாலிவுட்டில் அவர் மாஸ் எண்ட்ரி தந்தாலும், கோலிவுட்டில் அவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த இறைவன், அன்னபூரணி ஆகிய இரண்டு படங்களுமே சொதப்பலாக அமைந்தன.

நடிகை நயன்தாரா நடிப்பில் தற்போது மண்ணாங்கட்டி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதனை பிரபல யூடியூப்பரான டியூடு விக்கி இயக்கி வருகிறார். இப்படத்தில் யோகிபாபு உடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.

இதுதவிர தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்திலும் நடிகை நயன்தாரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் மற்றும் கீர்த்தி ஷெட்டி ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர்.

மற்ற நடிகர், நடிகைகள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வந்துவிட்டாலும் நயன்தாரா இப்படத்தில் நடிப்பதை மட்டும் படக்குழு மிகவும் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தில் உள்ள மற்றுமொரு சர்ப்ரைஸ் கதாபாத்திரம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளதாக கூறப்படுகிறது.

அவர் இப்படத்தில் நடிகை நயன்தாராவின் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதன்மூலம் கோலிவுட்டில் புது தந்தை – மகள் காம்போ கிடைத்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content