ஈரானுடனான போரால் 6,000 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலியர்கள் வைத்தியசாலையில் அனுமதி
ஈரானுடனான போர் தொடங்கியதிலிருந்து, இஸ்ரேலில் 6,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் 121 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்த வெளியிட்டுள்ளன.
அவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையிலும், 16 பேர் தீவிர சிகிச்சை நிலையிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 232 பேர் புதிய காயமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட 27 ஆளில்லா விமானங்களையும் 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் வெற்றிகரமாக இடைமறித்துள்ளதாக ஐக்கிய அரபு
அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து, மொத்தம் 1,941 ஆளில்லா விமானங்கள், 15 குரூஸ் ஏவுகணைகள் மற்றும் 425 பாலிஸ்டிக் ஏவுகணைகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.




