ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி
நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரையுலக பயணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில்,
திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்த ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்கள். அவரது மாறுபட்ட பாத்திரங்களின் மூலம் தலைமுறைகள்கடந்து மக்களின் மனதில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் ஓர் அடையாளமாக உள்ளார்.
வரும் காலங்களிலும் அவர் தொடர்ந்து வெற்றியடையவும், நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கவும் வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரஜினிகாந்த். 170-க்கும் மேற்பட்ட படங்கள் நடித்துள்ள ரஜினி, சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகிறது.
அவரது திரையுலக பயணத்துக்கு திரையுலகினர் உள்பட அரசியல் பிரமுகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.






