செய்தி விளையாட்டு

கிளப் உலகக் கோப்பை தொடரில் இருந்து மெஸ்ஸியின் இன்டர் மியாமி வெளியேற்றம்

கிளப் அணிகளுக்கான 21வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் 16 அணிகள் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.

இதில் ஜார்ஜியாவில் நடந்த ஒரு ஆட்டத்தில் மெஸ்சி தலைமையிலான இண்டர் மியாமி அணி, பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் உடன் மோதியது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் அடுத்தடுத்து கோல்கள் போட்டு அசத்தியது. இண்டர் மியாமி அணி பதில் கோல் அடிக்க எவ்வளவோ முயற்சித்தும் அந்த அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

முடிவில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் 4-0 என்ற கோல் கணக்கில் இண்டர் மியாமி அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. தோல்வியடைந்த இண்டர் மியாமி தொடரிலிருந்து வெளியேறியது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!