கொழும்பில் மக்கள் குடியிருப்பில் பாரிய தீ விபத்து – மக்களை வெளியேற்றத் தீவிர போராட்டம்
நாரஹேன்பிட்டி, தபர மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதி ஒன்றில் தற்போது பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த குடியிருப்புத் தொகுதியின் ஐந்தாவது மாடியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயைக் கட்டுப்படுத்த 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மேல் தளங்களில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன.
இதற்காக இரண்டு ஸ்கைலிப்ட் (Skylift) வாகனங்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.
இருப்பினும், தீ விபத்துக் காரணமாக வெளியேறும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆபத்தான நிலைமை ஏற்பட்டுள்ளது.
தற்போது இந்த ஸ்கைலிஃப்ட் வாகனங்களைப் பயன்படுத்திச் சிக்கியவர்களை மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
(Visited 3 times, 3 visits today)





