பொழுதுபோக்கு

இந்த பிரபலத்தை உங்களுக்கு தெரியுமா? திடீரென நடந்த நிச்சயதார்த்தம்

விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சின்னதம்பி சீரியலில் நடித்த நடிகர் பிரஜன், மீண்டும் விஜய் டிவியில் நடித்த சீரியல் தான் ‘அன்புடன் குஷி’.

இவருக்கு ஜோடியாக, இந்த சீரியலில் குஷி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மான்சி ஜோஷி.

1994 ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் பிறந்த இவர், தன்னுடைய பள்ளி படிப்பை பெங்களூரில் முடித்தாலும், கல்லூரி படிப்பை மங்களூரில் படித்தார்.

கல்லூரி காலத்தில் இருந்தே, மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்த மான்சி ஜோஷி, சிறந்த நடன கலைஞரும் ஆவார். டிக் டாக் மூலம் பல வீடியோக்களை வெளியிட்டு பிரபலமான இவருக்கு, ஆரம்பத்தில் கன்னட மொழி சீரியல்களில் தான் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

பின்னர் தமிழில் 2020-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ தொடரில் நாயகியாக நடித்தார்.

தற்போது மலையாள சீரியலான சந்திரகாந்தம் என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவருக்கும் ராகவா என்பவருக்கும் தற்போது திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்களை மான்சி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட, ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

See also  என் முதல் மனைவி சாதாரணமானவ இல்ல.. நடிகர் பாலா புகார்

மான்சி இருந்த ஒரே ஒரு சீரியலில் நடித்தாலும், தமிழில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைத்தளத்திலும் இவரை 175k ஃபாலோவர்ஸ் பின்தொடர்ந்து வருகிறார்கள். பிரமாண்டமாக நடந்து முடிந்த இவருடைய திருமண நிச்சயதார்த்தத்தில், பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தி உள்ளனர்.

(Visited 4 times, 4 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content