மணிகண்டனின் புதிய படம்! தொடங்கி வைத்த விஜய் சேதுபதி
மணிகண்டன் நடித்த ‘குட் நைட்’ தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது.
மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த ஃபீல்-குட் காமெடி நாடகம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது.
தற்போது ‘குட் நைட்’ படக்குழு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைகிறது.
‘குட் நைட்’ படத்திற்கும் இசையமைத்த சீன் ரோல்டன் இசையில் மணிகண்டனின் (ஜெய் பீம் புகழ்) அடுத்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கின்றன.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை புதுமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் எழுதி இயக்குகிறார்.
இந்த புதிய படத்தில் ‘மாடர்ன் லவ் சென்னை’ புகழ் ஸ்ரீ கௌரி பிரியா மற்றும் ‘கைதி’ புகழ் கண்ணா ரவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
வரவிருக்கும் புதிய படம் இன்று பூஜை விழாவுடன் தொடங்கியது.
படத்தின் படப்பிடிப்பை விஜய் சேதுபதி கைதட்டி தொடங்கி வைத்தார்.
இந்த பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளராக ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, படத்தொகுப்பாளராக பரத் விக்ரமன் மற்றும் கலை இயக்குநராக ராஜ் கமல் ஆகியோர் பணியாற்றுகின்றனர்.