ஆசியா

மலேசியாவில் முத்தத்தால் ஏற்பட்ட விபரீதம் – இரத்துச் செய்யப்பட்ட இசை நிகழ்ச்சி

மலேசியாவில் முத்தத்தால் இசை நிகழ்ச்சி ஒன்று இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

மலேசியாவில் வாரயிறுதி நடைபெறவிருந்த Good Vibes இசை நிகழ்ச்சியே இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த The 1975 என்ற இசைக் குழுவின் முன்னணிப் பாடகர் மலேசியாவின் ஓரினச் சேர்க்கைக்கு எதிரான சட்டத்தைக் குறைகூறியுள்ளார்.

நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற அவர்களின் இசை நிகழ்ச்சியின்போது Matty Healy அந்தச் சட்டத்திற்கு எதிராக அவதூறு கூறினார்.

பின்னர் மேடையில் இருந்த குழுவைச் சேர்ந்த Ross MacDonald என்பவரை முத்தமிட்டார்.

அது மிகவும் மரியாதையற்ற செயல் என்று சாடிய மலேசியத் தொடர்பு, மின்னிலக்க அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் (Fahmi Fadzil) அந்த 3 நாள் இசை நிகழ்ச்சியை இரத்துச் செய்தார்.

உள்ளூர்ச் சமூகத்தின் நம்பிக்கைகளை மதிக்கவேண்டும்; சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் நிகழ்ச்சிகள் இருக்கக்கூடாது என்று அமைச்சர் தமது Twitter பக்கத்தில் கூறினார்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்