பொழுதுபோக்கு

இந்தியில் ரீமேக் ஆகும் மகாராஜா; யார் நடிக்கப்போறது தெரியுமா?

விஜய் சேதுபதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் மகாராஜா.

இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும். மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதி உடன் மம்தா மோகன்தாஸ், அபிராமி, அனுராக் கஷ்யப், சிங்கம் புலி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

இந்த படத்தில் சர்ப்ரைஸாக இருந்தது சிங்கம் புலியின் கேரக்டர் தான். இதுவரை பல திரைப்படங்களில் காமெடியனாக கலக்கிய சிங்கம் புலியை இந்தப் படத்தில் பலரும் வெறுக்கக் கூடிய அளவுக்கு டெரரான வில்லனாக காட்டி இருந்தார் நித்திலன்.

விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் பட்டைய கிளப்பிய மகாராஜா திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து மாஸ் காட்டியது. நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து ரூ.100 கோடி வசூலிக்கும் முதல் படம் இதுவாகும். தியேட்டரை தொடர்ந்து ஓடிடியில் அண்மையில் ரிலீஸ் ஆன மகாராஜா திரைப்படம் அதிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. குறிப்பாக இந்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

இந்நிலையில், மகாராஜா படத்தை இந்தியில் ரீமேக் செய்ய வேலைகள் நடந்து வருகிறது. அப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை நடிகர் அமீர் கான் கைப்பற்றி உள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த லால் சிங் சத்தா திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், மகாராஜா ரீமேக்கில் நடித்து அமீர்கான் கம்பேக் கொடுக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!