அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதை – யோகிபாபுவின் புதிய டீசர்
காமெடி நடிகர் யோகிபாபு ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் லக்கி மேன். இப்படத்தை பாலாஜி வேணுகோபால் என்பவர் இயக்கி உள்ளார். ஆர்.ஜே.வாக பணியாற்றி வந்த இவர், நடிகராகவும் பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
இப்படம் மூலம் தான் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். அதிர்ஷ்டத்தை தேடி அலையும் மனிதனின் கதையை மையமாக வைத்து தான் இப்படத்தை எடுத்துள்ளனர்.
லக்கி மேன் படத்தை தின்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். சந்தீப் கே விஜய் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இப்படத்தில் யோகிபாபு உடன் வீரா, ரெபெக்கா, ஆர்.எஸ்.சிவாஜி உள்பட ஏராளமானோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது.





