லோகேஷ் அளவுக்கு சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நெல்சன்…

கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனரான நெல்சனின் சம்பளம் அசுர வளர்ச்சியை பெற்றிருக்கிறது. நெல்சனுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே விஜய்யுடன் இணையும் வாய்ப்பு கிடைத்தது.
அவர்கள் கூட்டணியில் உருவான பீஸ்ட் படத்தில் நெல்சனின் சம்பளம் 8 கோடி என பேசப்பட்டது. இந்த படத்தின் ரிலீஸுக்கு முன்பே கமிட்டானது தான் ரஜினியின் ஜெயிலர். அப்போது 15 கோடி சம்பளத்தை சன் பிக்சர்ஸ் நிர்ணயித்தது.
அதோடு ஜெயிலர் படம் வெளியாகி 650 கோடியை தாண்டி வசூல் செய்தது. இதன் காரணமாக சன் பிக்சர்ஸ் பிரம்மாண்ட காரையும் நெல்சனுக்கு பரிசாக வழங்கியது. இதைத்தொடர்ந்து மீண்டும் இவர்கள் கூட்டணியில் உருவாகிறது ஜெயிலர் 2.
இதற்கான படப்பிடிப்பு மார்ச் பத்தாம் தேதியிலிருந்து தொடங்கி இருக்கிறது. இதில் நெல்சன் சம்பளத்தை கேட்டால் தலையை சுற்றுகிறது. அதாவது இதற்கு முந்தைய படத்தில் 15 கோடி வாங்கி விட்டு அடுத்த படத்திற்கு 62 கோடி சம்பளம் பெற இருக்கிறார்.
இதே சூப்பர் ஸ்டார் உடைய கூலி படத்தை லோகேஷ் இயக்கியிருக்கிறார். அவருக்கு 63 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் லோகேஷ் அளவுக்கு நெல்சனும் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார்.
லோகேஷுக்கு என்று ஒரு தனி டிமாண்ட் இருந்து வருகிறது. மற்ற மொழியில் உள்ள பெரிய நடிகர்களும் இவர் படத்தில் நடிக்க ஆசைப்படுகின்றனர். அதோடு தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.
இப்படி இருக்கையில் லோகேஷ் போல் நெல்சனும் 60 கோடியை தாண்டி சம்பளம் வாங்கும் செய்தி கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. மேலும் இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு புயல் வேகத்தில் நடந்து வருகிறது.