“உடனடியாக வெளியேறுங்கள்” : ஈரானில் உள்ள அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை!
அமெரிக்க குடிமக்கள் உடனடியாக ஈரானை விட்டு வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தெஹ்ரானில் உள்ள அமெரிக்க மெய்நிகர் தூதரகம் நேற்றைய தினம் குறித்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்கள் இப்போது ஈரானை விட்டு வெளியேற வேண்டும். பாதுகாப்பானதாக இருந்தால், ஈரானில் இருந்து துருக்கியே அல்லது ஆர்மீனியாவுக்கு தரைவழியாக புறப்படுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்” என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் வொஷிங்டனுக்கும், தெஹ்ரானுக்குமான பதற்ற நிலை அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் இலக்கு வைக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





