சீனாவை உலுக்கிய நிலச்சரிவு: 30 பேர் மாயம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/2024-08-05T021454Z_87513519_RC2G89A5TQM9_RTRMADP_3_ASIA-WEATHER-CHINA-1739018619.webp)
சீனாவில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 30 பேர் காணாமல் போயுள்ளனர்.
தென்கிழக்கு மாகாணமான சிசுவானில் உள்ள மலை கிராமம் ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 10 வீடுகள் புதையுண்டன. சம்பவப் பகுதியில் இருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இது தவிர, அந்தப் பகுதியில் வசிக்கும் சுமாா் 200 போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனா்.
இந்த நிலச்சரிவில் சிக்கிய சுமாா் 30 பேரைக் காணவில்லை. அவா்களை மீட்கும் பணியில் அவசரகால மேலாண்மைத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலச்சரிவுக்கான காரணம், இதனால் ஏற்பட்டுள்ள நிலவியல் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
(Visited 1 times, 1 visits today)