இஸ்ரேலில் விவசாய வேலை வாய்ப்பு பெற்ற இளைஞர்களுக்கு அரசிடம் இருந்து நிலம்

இஸ்ரேலில் விவசாயத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற இலங்கை இளைஞர்களுக்கு காணிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஜனாதிபதியிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த உடன்படிக்கை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இளைஞர்களுக்கு தலா இரண்டரை ஏக்கர் நிலத்தை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்களை தொழில் முயற்சியாளர்களாக உயர்த்தும் வகையில் இந்த ஆண்டு பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
(Visited 12 times, 1 visits today)